சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நிலையில், இது விதிகளுக்குட்பட்டு நடைபெற்றதா? என்பதை அறிய தமிழக அரசு குழு அமைத்தது. மருத்துவத்துறை குழுவின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
இதன்படி, நயன்தாரா, விக்னேஷ் எந்த மருத்துவமனையை அணுகி இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டனர், என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.