தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பாக ஆளும் தமிழ்நாடு - பெருமிதம் பொங்க ட்வீட் செய்த முதலமைச்சர் - Public Affairs Centre

சிறப்பாக நிர்வாகம் செய்யும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்ததை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TN has been rated second best governed states
TN has been rated second best governed states

By

Published : Oct 31, 2020, 1:26 PM IST

நாட்டிலேயே சிறப்பாக ஆட்சி செய்யும் மாநிலங்கள் குறித்து Public Affairs Centre எனப்படும் பொது விவகாரங்கள் மையம் ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்பட்டுவரும் இந்த மையம் வெளியிட்டுள்ள தரவரிசையில் 1.388 குறியீட்டு புள்ளியுடன் கேரளா முதலிடத்தையும், 0.912 புள்ளியுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. இந்தத் தரவரிசைப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களை உத்தரப் பிரதேசம், ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.

பெருமிதம் பொங்க ட்வீட் செய்த முதலமைச்சர்

தமிழ்நாடு சிறப்பாக நிர்வாகம் செய்யும் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்ததை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியாவில் மிகச் சிறப்பாக ஆளும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கான நம்முடைய அயராத முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் பயனாகும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலமாக மாற்ற நாம் தொடர்ந்து ஒன்றாக பணிபுரிவோம், கடினமாக உழைப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க... 'இரும்பு மனிதரை வணங்குகிறேன்' - முதலமைச்சர் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details