தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 40ஆக உயர்வு! - தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா இருப்பது உறுதியானதையடுத்து, மொத்தமாக மாநிலத்தில் 40 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
11:31 March 28
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.
அந்தப் பதிவில், மேற்கிந்திய தீவுகளிலிருந்து வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயதான நபருக்கும், இங்கிலாந்திலிருந்து வந்த காட்பாடியைச் சேர்ந்த 49 வயதான நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...கரோனா பாதிப்பிற்கு அதிகமாக நிதி ஒதுக்கிய தஞ்சாவூர் எம்.பி.யுடன் ஒரு உரையாடல்!