நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து நின்ற பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் படுதோல்வி அடைந்தார்.
'நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது' - அரசு அறிவிப்பு! - நாங்குநேரி தொகுதி
சென்னை: வசந்தகுமாரின் ராஜினாமாவை தொடர்ந்து, நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரிவித்துள்ளது.
vasantha kumar
இந்நிலையில், எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தன்னுடைய நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை வசந்தகுமார், இன்று காலை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது என அரசு இதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.