தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Feb 20, 2021, 10:13 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலில் சிறிய அளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் இளைஞர்களின் பங்களிப்பால் பெரும் போராட்டமாக மாறியது.

குறிப்பாக சென்னை மெரினா, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.20) அறிவித்துள்ளார்.

இதனையடுத்து 308 பேர் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.

இதையும் படிங்க: 'நியாயம் தர்மம் எல்லாம் இல்ல... கேள்வி கேட்டா இதுதான் நெலம!' - வேதனையில் குமுறும் ஜோதிமணி

ABOUT THE AUTHOR

...view details