தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம்" - தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் - சட்டப்பேரவையில் தாக்கல்

Tasmac bill submit TN Assembly: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 3:56 PM IST

Updated : Oct 9, 2023, 4:52 PM IST

சென்னை:திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க:"தமிழகத்தில் சமூகநீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் பேட்டி!

இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்க வகை செய்யும் வகையில் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா? என தெரிவிக்கும்படி அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (அக்.9) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இந்த திருத்த விதிகள், சட்டமன்றத்தில் இன்று(அக்.9) தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறி, நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்தார்.

இதையும் படிங்க:'நியூஸ்க்ளிக்' வழக்கு; விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாத ஆட்சியாளர்களால் பத்திரிக்கைத்துறைக்கு அச்சுறுத்தல்

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு இன்றுதான் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணையை அக்டோபர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை திருத்த விதிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் எரிவாயு வெளியேற்றம்..! கிராம மக்கள் அச்சம்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Last Updated : Oct 9, 2023, 4:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details