தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2020, 6:59 PM IST

ETV Bharat / state

கரோனா மருத்துவக் கழிவு விவரத்தை தெரிவிக்க அரசு உத்தரவு!

சென்னை: கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிடம் பெறப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்த விவரத்தினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

TN Govt Submit the how dispose the Covid 19 bio medical waste
TN Govt Submit the how dispose the Covid 19 bio medical waste

இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது, ' அனைத்து சுகாதார வசதி அமைப்புகள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் அல்லது வீடுகள், வீட்டு பராமரிப்பு வசதிகள், ஆய்வகங்கள், மருத்துவக் கழிவு பொது சுத்திகரிப்பு வசதிகள்... இவை அனைத்தும் கோவிட் - 19ல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை கையாளுதல், சேமித்தல், போக்குவரத்து செய்தல் மற்றும் வெளியேற்றுதலில் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

செய்ய வேண்டியவை

  • மருத்துவமனைகளின் கடமை 2016ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மருத்துவக்கழிவு மேலாண்மை விதி மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கி உள்ள வழிகாட்டுதல்களின் படி, கழிவுகளைப் பிரித்து நிறக்குறியீடு உள்ள கொள்கலன்களிலோ, பைகளிலோ முறையாகப் பிரித்து வைக்க வேண்டும்.
  • முன் எச்சரிக்கையாக கோவிட்-19 நோயாளிகளின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உருவாகும் கழிவுகளை இரண்டு அடுக்கு உள்ள பைகளில் கசிவுகள் ஏற்படாத வகையில் சேகரிக்க வேண்டும்.
  • மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக சேமித்து, மருத்துவக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். கோவிட் - 19 நோயாளிகளின் மருத்துவக்கழிவுகளைத் தனியாகப் பிரித்து, 'கோவிட்-19' என்ற பெயர் சீட்டு ஒட்டப்பட்டு, பாதுகாப்பாக மருத்துவக் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • சேகரிக்கப்பட்ட கழிவுகளை வார்டுகளிலிருந்து நேரடியாக மருத்துவக் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தின் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
  • கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்படும் கொள்கலன்கள், தொட்டிகள் மற்றும் தள்ளுவண்டிகளை (1 விழுக்காடு) சோடியம் ஹைப்போகுளோரைட் திரவம் மூலம் உட்புறமும் வெளிபுறமும் தினமும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  • மருத்துவக் கழிவுகள், திடக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கென்று தனித்தனியாக துப்புரவுப் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். உபயோகப்படுத்தப்பட்ட பிபிஇ எனப்படும் கண்ணாடி முக பாதுகாப்புக் கவசம், ஏப்ரன், பிளாஸ்டிக் முழுக் கவசம், ஹேஸ்மெட் சூட், கை உறைகள் போன்ற உபகரணங்களை சிவப்பு நிற கொள்கலன்களில் சேகரிக்க வேண்டும்.
  • உபயோகப்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் (மூன்றடுக்கு, என் 95 மாஸ்க்) தலை உறை, தொப்பி, காலணி உறை, தூக்கி எறியும் லினன் கவுன், பிளாஸ்டிக் அல்லாத மற்றும் செமி பிளாஸ்டிக் உள்ள உபகரணங்கள் மஞ்சள் நிற கொள்கலன்கள், பைகளில் சேகரிக்கப்பட வேண்டும். கழிப்பறைக்குச் செல்ல இயலாத கோவிட்-19 நோயாளிகளால் உபயோகப்படுத்தப்படும் டயாபர்களை மருத்துவக்கழிவு கையாளும் விதமாகவே எடுத்து, அதனை மஞ்சள் நிற கொள்கலன்களில் சேகரிக்க வேண்டும்.
  • பொது மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனத்தின் கடமைகள் கோவிட்- 19 தனிமை வார்டுகள், தனிமை முகாம்கள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள், ஆய்வு மையங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்த தகவல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
  • மேலும், மருத்துவக் கழிவுகளை கையாளும் ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்றடுக்கு கவசங்கள், ஸ்ப்ளாஷ் ப்ரூஃப் ஏப்ரான், கவுன்கள், நைட்ரைல் க்ளவுஸ், கம்பூட்ஸ், பாதுகாப்பு கண்ணாடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் சோடியம் ஹைப்போகுளோரைட் அல்லது உகந்த ரசாயனங்களைக் கொண்டு கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  • நிறுவன வளாகத்தில் கோவிட் - 19 மருத்துவக் கழிவுகள் பெறப்பட்ட உடனே, அவை முறைப்படி அகற்றப்பட வேண்டும். கோவிட்-19 மருத்துவக் கழிவுகள் குறித்து தனியாகப் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். உடல் நலம் இல்லாமல் இருப்பதற்கான அறிகுறி உள்ளவர்களை பணிபுரிய அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு உரிய சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவக் கழிவுகளை கையாள அதற்கென்று தனியாக வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். கோவிட்- 19 அறிகுறியுள்ள பணியாளர்களை சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.
  • மேலும் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 11 பொது சுத்திகரிப்பு நிலையங்களைத் தொடர்பு கொள்வதற்கான எண்களும் அவற்றின் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...டாஸ்மாக் எதிர்ப்பு: முதலமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கிய ஜோதிமணி

ABOUT THE AUTHOR

...view details