தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிகள், பெண்களுக்கு இலவச நாப்கின் - ரூ. 44 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசாணை

சென்னை: அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

tamilnadu secretariat
தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்

By

Published : Dec 16, 2020, 10:41 PM IST

மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நகர்ப்புறத்தில் பயிலும் மாணவியர்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்க ரூ. 44,15,46,000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 1181 பேருக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details