சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், ”தமிழ்நாட்டில் அண்மையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு, நேற்று கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது.
மேலும் 3 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி - சேலம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு
சேலம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
tn govt released go to Permission to hold jallikkattu competitions in Salem, Pudukottai and Trichy districts
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும், திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகளை வருகின்ற 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.