இது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகின்றது. இதில் கடந்த 2ஆம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) பல செயல்பாடுகள் / பணிகள் நாளை முதல் தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. அவற்றின் விவரம் வருமாறு:
- டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
- பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
- உணவகங்கள் (பார்சல் மட்டும்)
- பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
- கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
- சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
- மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
- மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
- கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
- வீட்டு உபயோக இயந்திரங்கள் (House hold appliances) மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
- மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
- கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
- சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை)
- சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக பகுதிகளில் மட்டும்
- மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
- டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
- பெட்டி கடைகள்
- பர்னிச்சர் கடைகள்
- சாலையோர தள்ளுவண்டி கடைகள்
- உலர் சலவையகங்கள்
- கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
- லாரி புக்கிங் சர்வீஸ்
- ஜெராக்ஸ் கடைகள்
- இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
- இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
- நாட்டு மருந்து விற்பனை கடைகள்
- விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
- டைல்ஸ் கடைகள்
- பெயிண்ட் கடைகள்
- எலக்ட்ரிகல் கடைகள்
- ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
- நர்சரி கார்டன்கள்
- மரக்கடைகள் மற்றும் பிளைவுட் ( Ply wood ) கடைகள்
- மரம் அறுக்கும் கடைகள் (Saw mills )