தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிக்ஜாம் புயல் எதிரொலி; டிச.15, 16 அன்று ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டம் - தமிழக அரசு தகவல்! - Formula 4 car race case

Formula 4 car race: மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் ஒத்தி வைக்கப்பட்டபார்முலா 4 கார் பந்தயம் டிசம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 6:53 AM IST

சென்னை: சென்னை தீவுத் திடலைச் சுற்றி டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக ஃபார்முலா 4 கார் பந்தயப் போட்டி தமிழ்நாடு அரசால் நடத்தப்பட இருந்தது. இதனிடையே, சென்னை மாநகருக்குள் எந்த பகுதியிலும் இந்த கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்த கார் பந்தயத்தை மிக்ஜாம் புயல், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை டிசம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பந்தயத்தை நடத்துவதற்கான சாலைப் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டதாகவும், டிக்கெட் விற்பனை தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார். அதேநேரம், பந்தயம் நடத்தும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அவர் தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (டிச.11) நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு..

ABOUT THE AUTHOR

...view details