தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு - Tn govt. ordered new court

சென்னை: மாற்று திறனாளிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு

By

Published : Sep 28, 2019, 7:44 PM IST

Updated : Sep 28, 2019, 7:52 PM IST

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மகேஸ்வரி அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ‘மாற்றுதிறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி குற்றங்களை விசாரிப்பதற்காக சென்னையில் முதன்மை நீதிபதி, சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டின் இதர நீதிமன்றம், மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றம்/ மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவை சிறப்பு நீதிமன்றங்களாக செயல்படும்.

அதேபோல் தற்போது சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக (மனித உரிமைகள்) பணிபுரிபவரே, கூடுதலாக மாற்று திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் கீழ் வரும் வழக்குகளையும் கையாள்வார். எனவே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வழக்குகளை உடனடியாக கையாள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Sep 28, 2019, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details