தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குக!'

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 50 விழுக்காடு படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்கு 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்க வேண்டும்
கரோனா சிகிச்சைக்கு 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்க வேண்டும்

By

Published : May 1, 2021, 6:20 AM IST

இது குறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் 578 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனைகளில் 50 விழுக்காடு படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கீடு செய்ய வேண்டும். அத்தோடு ஆக்சிஜன் வசதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் ஏற்கனவே திட்டமிட்டபடி அவசரம் அல்லாத அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதை மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைக்க வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிகிச்சை வழங்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து அறிந்துகொள்ள 99949-57070 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையமாக மாறும் தனியார் பள்ளி

ABOUT THE AUTHOR

...view details