சென்னை:அனைத்து நியாய விலைக் கடைகளிலும் புகார்களை தெரிவிக்க புகார் பதிவேடு வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய வழியில் புகார்களைத் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால் பதிவேடு முறையை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பதிவேடு முறையால் புகாரை உடனே தெரிவிக்கவும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள இணையவழி புகார் தெரிவிக்கும் முறையுடன், பதிவேடு முறையையும் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.