தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், கரோனா தொற்றை தவிர்க்க தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 15-7-2020 முதல் 31-7-2020 வரை இயக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், பொது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி அரசு அலுவலக பணியாளர்கள், அலுவலகப் பணிகள் மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ஆணை வழங்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகப் பணி மேற்கொள்வதில் விலக்கு- தமிழ்நாடு அரசு
சென்னை: கரோனா சூழலில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகப் பணி மேற்கொள்வதிலிருந்து தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள்ளது.
physically challenged govt employees
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயங்காத காலகட்டத்தில், அரசு அலுவலகங்களில் பணிபுரிந்துவரும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு பணி மேற்கொள்வதில் விலக்கு அளிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.