சென்னை: 2028ஆம் ஆண்டில் மெட்ரோ இரயில் இயக்கத்திற்காக ரூ.2820.90 கோடி செலவில் 6 பெட்டிகள் கொண்ட 28 இரயில் தொடர்களை கூடுதலாக கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்காக சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது.
இத்தகைய காரணத்தினால், அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுவதால் 2015ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்ட பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் காலத்தை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ நிர்வாகம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்து வருகிறது. இதனால், 2028ஆம் ஆண்டில் மெட்ரோ இரயில் இயக்கத்திற்காக ரூ.2820.90 கோடி செலவில் 6 பெட்டிகள் கொண்ட 28 இரயில் தொடர்களை கூடுதலாக கொள்முதல் செய்ய திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையிடம் அனுமதி கோரிய நிலையில், மெட்ரோ நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மொத்தம் 54.1 கி.மீ நீளத்துடன் கூடிய இரண்டு வழித்தடங்களை கொண்ட சென்னை மெட்ரோ இரயில் கட்டம் I (நீட்டிப்புடன் சேர்த்து) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. கட்டம் I-ன் இயக்கத்திற்காக 4 பெட்டிகளுடன் கூடிய 52 இரயில் தொடர்களை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்கனவே கொள்முதல் செய்திருந்தது.