தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 19, 2022, 8:27 PM IST

ETV Bharat / state

சென்னை பல்கலைக்கழக வினாத்தாளில் குளறுபடி... விசாரணை குழு அமைத்து அரசாணை

சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு, விசாரணைக் குழு அமைத்து அரசு ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னைபல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்றாவது பருவத்தேர்வில் பொதுத்தமிழ் நவ.18ஆம் தேதியன்று நடைபெறவிருந்தது. அத்தேர்வின்போது, அப்பாடத்திற்கு உரிய வினாத்தாள் வழங்கப்படாமல் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது.

எனவே, மாணவர்களால் அவ்வினாத்தாளின் அடிப்படையில் தேர்வு எழுத இயலாத நிலையில், அவர்கள் இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் விவரத்தைத் தெரிவித்தனர். இதனையடுத்து, வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு மட்டும் அன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு; அத்தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.

இது தொடர்பாக, உயர் கல்வித்துறை அமைச்சர் வினாத்தாள் மாற்றத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேற்கண்ட வினாத்தாள் மாறிய விவகாரம் குறித்து விசாரணை செய்ய க.லட்சுமி பிரியா, தொழில்நுட்பக் கல்வி ஆணையர், செயலர், தமிழ்நாடு மாநில எஸ்.கிருஷ்ணசாமி, உறுப்பினர் ம.இளங்கோ ஹென்றி தாஸ், உயர்கல்வி மன்றம், மற்றும் அரசு இணைச் செயலாளர், உயர்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழுவினை கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.

* சென்னை பல்கலைக்கழகத்தில் 18.11.2022 நடைபெறவிருந்த, முன்றாவது பருவத்தேர்வின்போது, பொதுந்தமிழ் - 111 வினாத்தாள் மாறிய விவகாரம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* இதுபோன்ற தவறுகள், மீண்டும் நிகழாதவாறு தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்கவேண்டும்.

* இந்த தவறுக்கு பொறுப்பான அதிகாரிகள், அலுவலர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

* மேற்கண்ட குழுவின், விசராணை அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

* குழுவின் விசாரணைக்கு தேவையான, அலுவலக வசதிகளை சென்னை பல்கலைக்கழகம் செய்து தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முறைகேடு புகார் எதிரொலி.. பெரியார் பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details