தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க தலைமைச் செயலர் தலைமையில் குழு! - தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக தலைமைச் செயலர் தலைமையில் 18 உறுப்பினர்களைக் கொண்ட பணிக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

TN Govt formed one team under secretary for corona virus infection contral
TN Govt formed one team under secretary for corona virus infection contral

By

Published : Mar 17, 2020, 4:31 PM IST

கரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பல்வேறு துறை அலுவலர்களுடன் நேற்று நடத்திய ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதனடிப்படையில் 18 பேர்களை நியமித்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலர், வருவாய் துறையின் முதன்மைச் செயலர், ரயில்வே மேலாளர், விமான நிலைய இயக்குநர் உள்ளிட்ட 18 பேர் பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு தொடர்ந்து கூட்டங்களை நடத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சட்டப்பேரவை நிகழ்வுகள்: உடனுக்குடன் வழங்குகிறது நமது ஈடிவி பாரத்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details