ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்கு 7 பேர் குழு - தமிழ்நாடு அரசு ஆணை! - புதிய கல்விக்கொள்கை 2020

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

TN govt. order
தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்
author img

By

Published : Sep 4, 2020, 10:31 AM IST

இந்தக் குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரை செல்வி ஆகிய ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவுக்கு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா தலைமை வகிக்கிறார். புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகள், பரிந்துரைகள் ஆகிவற்றை ஆராய்ந்து அறிக்கை இந்தக் குழு சமர்பிக்கும் என்று அரசு வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் புதிய கல்விக் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் முக்கிய அம்சமாக மாநிலங்களில் மும்மொழி கொள்கை குறிப்பிடப்பட்டிருந்து. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்த ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களின் விவரம் அனுப்ப உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details