தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இணைய வழி தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் நிகழ்ச்சிகள் - job training program

சென்னை: மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து இணைய வழி தொழில்நெறி விழிப்புணர்வு திறன் நிகழ்ச்சிகளை நாளை நடத்திட திட்டமிட்டுள்ளனர்.

TN Govt conducting job training program tommorow

By

Published : Jul 14, 2020, 1:26 AM IST

கடந்த 2018 ஜனவரி 18ஆம் தேதி அரசாணையின்படி தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஜூலை இரண்டாவது வாரம் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, வேலைவாய்ப்பு, பயிற்சி துறையின் கீழ் கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து நாளை (ஜூலை 15) பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளிகள், அனைத்து வேலைநாடும் இளைஞர்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் ( Webinars )போட்டிகள் (Online competition ) இணைய வழி தொழில்நெறி கருத்தரங்குகள் (Webinars), சுய முன்னேற்ற உரைகள் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இளைஞர்களின் மேம்பாடே இந்தியாவின் வளர்ச்சி என்பதால், அவர்கள் இந்நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வேலைவாய்ப்பு, பயிற்சி துறை இயக்குநர் மற்றும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் ஏ.விஷ்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details