தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை - தமிழ்நாடு அரசு

சென்னை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய ஆலோசனையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

TN govt clarification to central govt on school reopen
TN govt clarification to central govt on school reopen

By

Published : Jul 19, 2020, 1:00 PM IST

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட பள்ளிகள் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாத நிலை உள்ளது. இதையடுத்து பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மாநில அரசுகளிடம் ஆலோசனை கேட்டது.

இந்த ஆலோசனையில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்த முடிவை எடுக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் ஆந்திரா, பிகார், ஹரியானா உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற தேதியை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன. பெரும்பான்மையான மாநிலங்கள் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்ற கருத்தை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எந்த மாதத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்கள் பொதுமக்களிடம் கருத்துகளை பெற்று மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசு

பள்ளிகள் திறக்கப்படும்போது பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன என்கின்ற கருத்தையும் பெற்று, நாளை (ஜூலை 19) சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது.

இதையும் படிங்க... ‘தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகள்’

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details