தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்துக - கர்நாடக அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்! - இறையன்பு

காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்துக - கர்நாடக அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்துக - கர்நாடக அரசுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

By

Published : Apr 29, 2023, 4:20 PM IST

சென்னை:காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கர்நாடக மாநில தலைமைச் செயலாளருக்கு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தில், “காவிரியில் நடப்பு ஆண்டு 2022 - 2023இல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டிஎம்சி நீர் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரின் அளவைக் காட்டிலும், இது 484 டிஎம்சி கூடுதல் நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது. இந்த நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன் சாக்கடை நீர் ஓடுகிறது. முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவு நீராகவே உள்ளது. இதனைத் தடுக்க துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விஸ்கோஸ், செயற்கை இழை பஞ்சு, நூல்களுக்கு அரசின் தரக் கட்டுப்பாட்டில் விலக்கு: மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details