சென்னை:நிதிநிலை அறிக்கை, தொழில் முதலீடு, மேகதாது அணை விவகாரம், கரோனா அதிகரிப்பு ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க இன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டபேரவைத் தேர்தலுக்குப் பின்பு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதில், ஆகஸ்ட் கடைசி வாரம் வாக்கில் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரை நடத்துவது குறித்தும், துறை ரீதியாக நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் அறிவிப்பது பற்றியும் விவாதிக்கப்பட இருக்கிறது.
தொழில் துறை... முதலீடு!