தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஈழுவா, தியா சமுதாய மக்கள் பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்’ - தலைமைச் செயலகம்

சென்னை: ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்கள் பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

By

Published : May 20, 2020, 11:52 PM IST

ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ்
வழங்கக் கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கக் கோரி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளரை தலைவராக நியமித்து நான்கு உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பொருள் தொடர்பாக குழுவிற்கு கோரிக்கைகள் முறையீடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் 26.5.2020க்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அல்லது குழுவின் உறுப்பினர் - செயலர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், எழிலகம் விரிவாக்கக் கட்டடம், 2-ம் தளம், சேப்பாக்கம், சென்னை-5 அவர்களுக்கு எழுத்துப் பூர்வமாக தபால் மூலமும், மின்னஞ்சல் (dir-combc@tn.gov.in) மூலமாகவும் அளிக்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details