தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்கலைக் கழகங்களில் முறைகேடு: விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு - chennai news in tamil

சேலம் பெரியார், மதுரை காமராசர், சிதம்பரம் அண்ணாமலை ஆகிய பல்கலைக்கழகங்களில் நிர்வாக ரீதியில், பதவி உயர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரணை செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

tn-govt-appointment-enquiry-committe-to-investigate-university-abuse
பல்கலைக் கழகங்களில் முறைகேடு: விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

By

Published : Jul 9, 2021, 12:22 PM IST

சென்னை:சேலம் பெரியார், மதுரை காமராசர், சிதம்பரம் அண்ணாமலை ஆகிய பல்கலைக் கழக பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அமைக்க குழு அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.

அதன்படி, உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் விசாரணை குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்து. உயர் கல்வித்துறை துணை செயலாளர், உயர்கல்வித் துறை இணை செயலாளர் ஆகியோர் விசாரணை அலுவலர்களாக குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை இக்குழு அரசிடம் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேம்படுத்த வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details