நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடேசன் என்ற அர்ச்சகர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்து கைங்கரியப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிழே விழுந்தார். இதையடுத்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாமக்கல் அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - தமிழக அரசு அறிவிப்பு - தமிழக அரசு
சென்னை: நாமக்கல் அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க உள்ளதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நாமக்கல் அர்ச்சகர்
வெங்கடேசனின் குடும்பத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வெங்கடேசன் குடும்பத்துக்கு தெரிவித்துள்ளார்.