சென்னை:பதிவுத்துறையில் கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ஜியோ கோ.ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) முறையில், இடத்தின் புகைப்படம் எடுத்து இணைக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆவணங்களை பதிவு செய்யப்படும்போது ஆதார் எண் கட்டாயம் என்றும், ஆதார் எண்கள் சரியாக இருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆவணப் பதிவின்போது தரகர்கள் அனுமதியும் தடுக்கப்பட்டுள்ளது. வீட்டுமனைகளை பதிவு செய்யும்போது பல்வேறு முறைகேடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கவும் விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதனால் அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!