சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. புயல் ஓய்ந்த பின்னும், மழைநீர் வடியாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்கவும், தன்னார்வலர்கள் தங்களது பங்களிப்பை வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நிவாரண நிதி வழங்குவதற்கான வங்கி விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடவுள்ளார்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக, மிக்ஜாம் மீட்புப் பணிகளுக்கு தங்களின் பங்களிப்பை வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொதுமக்களும் இந்தப் பணிக்கு தங்களது பங்களிப்பினையும் வழங்கிட விருப்பம் தெரிவித்து, தமிழக அரசைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ஒன் கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஓழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-இன் கீழ் விலக்களிக்கப்படும். இந்த நன்கொடைகளை மின்னணு முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம்.
வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை அல்லது பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி பற்றுச் சீட்டினைப் (Receipt) பெற்றுக் கொள்ளலாம்.
https://cmprf.tn.gov.in
Electronic Clearing System (ECS) / RTGS / NEFT மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.
வங்கி விவரம்:
வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கிளை - தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009
சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070