தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகரிக்கும் வைரஸ் தொற்று: கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை உருவாக்க நிதி ஒதுக்கீடு - கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு

சென்னை: மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக புதியதாக கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை உருவாக்க நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

TN secretariat
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

By

Published : Jul 29, 2020, 8:09 AM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தலைநகர் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனா சிகிச்சை மையங்களை அமைக்க ரூ.69 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கரோனா சிற்பபு சிகிச்சை மையங்களை உருவாக்க நித ஒதுக்கீடு செய்து அரசாணை

இந்த நிதியானது, மாநிலம் முழுவதிலும் உள்ள 36 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக வழங்கப்படவுள்ளது.

கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்கான நிதி ஒதுக்கீடு மாவட்ட வாரியாக

மதுரை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 36 மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்தந்த மாவட்டங்களில் புதிய கரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கவும் இந்த நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்கான நிதி ஒதுக்கீடு மாவட்ட வாரியாக

இதையும் படிங்க:தலைநகரில் ஆம்புலன்ஸ் வசதி போதியளவில் உள்ளதா?

ABOUT THE AUTHOR

...view details