தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”ஆயுதபூஜை, விஜயதசமி நன்னாள்களில் தமிழ்நாடு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆயுதபூஜை பண்டிகை, தீய சக்தியை அழித்து நல்ல சக்தியின் வெற்றியைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரிக் கொண்டாட்டங்களில் மனித இனத்தை பேணிப் பாதுகாக்கும் துர்கை அன்னையைப் போற்றிப் பாடுகின்றோம். பத்தாம் நாளில் பகவான் ஸ்ரீராமர் மற்றும் துர்கை அன்னையின் வெற்றியை விஜயதசமியாக நாடு முழுவதும் பல்வேறு முறைகளில் கொண்டாடுகிறோம்.