சென்னை:பணி நிமித்தமாக இன்று விமானத்தின் மார்க்கமாக தனது குடும்பம் மற்றும் பாதுகாவலர்களுடன் டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. . டெல்லி பயணத்தின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறபட்டுச் செல்கிறார். டெல்லி புறபட்டுச் செல்லும் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆளுநர் குடும்பத்தினர் ஆகியோரும் புறப்பட்டு செல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளன. பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி செல்லும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, டெல்லியில் சுமார் ஐந்து நாட்கள் தங்க உள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர். என். ரவி அமைச்சரவையில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டார். பின்னர் அது குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அந்த அறிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதையும் படிங்க:காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைக்க தமிழக அரசு என்ன செய்தது - டிஐஜி தற்கொலை குறித்து அண்ணாமலை!