தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை.. துணை வேந்தர்களுடன் ஜூன் 5ம் தேதி ஆளுநர் ஆலோசனை.. அமைச்சர் பொன்முடி ரியாக்ஷன் என்ன?

புதிய கல்விக் காெள்கை குறித்து, வரும் 5-ஆம் தேதி ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆலோசனை நடத்த பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டமிட்டுள்ள நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார்.

புதிய கல்விக் காெள்கை குறித்து துணைவேந்தர்களுடன் ஆலோசிக்க ஆளுநர் அழைப்பு
புதிய கல்விக் காெள்கை குறித்து துணைவேந்தர்களுடன் ஆலோசிக்க ஆளுநர் அழைப்பு

By

Published : May 31, 2023, 10:05 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறை, கால்நடைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மைத் துறை, மீன்வளத் துறை ஆகியவற்றின் கீழ் 19 மாநில பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாட்டின் ஆளுநர் இருந்து வருகிறார். பல்கலைக்கழங்களின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது புதிய கல்விக் கொள்கையை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் தமிழ்நாட்டில் தேசியக்கல்விக் காெள்கைக்கு கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கும் பணிகள் டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வுப் பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 5 ஆம் தேதி ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆலோசனை நடத்துகிறார். புதிய கல்விக் கொள்கைத் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து துணை வேந்தர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: 'கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் குடிநீர் வடிகால் வாரியம் தனித்துறையாக உருவானது' - அமைச்சர் எ.வ.வேலு!

ஏற்கனவே ஆளுநர் தரப்பிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவுகள் அல்லது தகவல்கள் வருகின்ற போது மாநில அரசை துணை வேந்தர்கள் கலந்து ஆலோசிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. எனவே ஆளுநர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உயர் கல்விதுறையின் அனுமதியைப் பெற துணை வேந்தர்கள் முடிவு செய்து உள்ளனர்.

இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறும் போது, "தமிழ்நாடு ஆளுநர் வரும் 5 ஆம் தேதி புதியக் கல்விக் கொள்கை குறித்து ஆலோசிக்க கூட்டியுள்ள கூட்டத்தில் துணை வேந்தர்கள் கலந்துக் கொள்வதற்கு எந்த விதமான தடையும் இல்லை. எல்லா மாநிலங்களுக்கும் அவரவர் மாநிலத்தின் கல்வி கொள்கையை வகுக்க முன்னுரிமை உண்டு.

கர்நாடகாவிலும் புதியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆளுநர் கட்டுப்பாடுடன் நடந்து கொள்வது அனைவருக்கும் நல்லது. துணை வேந்தர்கள், ஆளுநர் கூட்டத்தில் கலந்து கொள்வது அவரவர் விருப்பம். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டு உள்ளது" என்று கூறி உள்ளார்.

இதையும் படிங்க:ஆளுநர் கட்டுப்பாடோடு நடந்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது - அமைச்சர் பொன்முடி காட்டம்

ABOUT THE AUTHOR

...view details