சென்னை:கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர். இதன் முடிவுகள் நேற்று (செப் 7) வெளியானது. இதில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வெழுதிய 1,32,167 பேரில், 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். அதில் தமிழ்நாடு மாணவர் திரிதேவ் விநாயக் தமிழ்நாட்டில் முதலிடமும், ஹரிணி 2ஆவது இடமும் பிடித்துள்ளார்.
நீட் தேர்வில் ராஜஸ்தான் மாணவி தன்ஷிகா தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தநிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வெழுதிய 50% மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ராவி வாழ்த்துகளை தெரிவித்தார்.