ஐந்தாம் ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 250-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர்! - யோகா
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் ராஜ்பவனில் யோகா பயிற்சி மேற்கொண்டார்.
TN Governor
இந்தியாவால் உலகெங்கும் யோகா தினம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் உலக நாடுகள் பலவும் யோகா பயிற்சியில் மக்களை ஈடுபட அறிவுறுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யோகா தினத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தி இந்த ஆண்டோடு ஐந்தாண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்று ஐந்தாம் ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
Last Updated : Jun 21, 2019, 7:03 PM IST