இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலி லிக்னைட் லிமிடெட் கார்ப்பரேஷனின் வெப்ப மின் நிலையம்- IIஇல் பாய்லரில் வெடிப்பு ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
பதினேழு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து, வருத்தமடைந்துள்ளேன்.