தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிப்பட்ட விருப்பம் நிறைவேற வாழ்த்துகள்- தமிழ்நாடு ஆளுநர் புத்தாண்டு வாழ்த்து - TN Governor Banwarilal Purohit wishes people

சென்னை: ஒவ்வொருவரும் நல் ஆரோக்கியத்துடன் காணபட்டு, தனிப்பட்ட விருப்பம் நிறைவேறக்கூடிய ஆண்டாக திகழ வாழ்த்துகள் என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TN Governor Banwarilal Purohit wishes people for the occasion of  new year
TN Governor Banwarilal Purohit wishes people for the occasion of new year

By

Published : Dec 31, 2020, 3:27 PM IST

இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள 2021 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், "தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் புதிய ஆண்டான 2021 தொடக்கத்தில் இனிமை நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நாம் அனைவரும் ஒன்றுபட்ட, வளமான, ஆரோக்கியம் நிறைந்த இந்தியாவையும் தமிழ்நாட்டையும் கட்டியெழுப்பிட உறுதியெடுத்துக் கொள்வோமாக!

நம்மிடையே புதிய தொடக்கத்தை உருவாக்கிடும் நிகழ்வாகவும், நம் வாழ்வில் தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெற்றிடும் வகையில் நமது செயல்பாடுகளைப் புதுப்பித்து புதிய விடியலைக் காண செய்திடவும் இப்புத்தாண்டு வழிவகுத்திட வாழ்த்துகிறேன்.

அன்பு, மனதுருக்கம், சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளை நம் உள்ளத்திலே நிலைபெறச் செய்திடவும், அமைதியையும், நல்லிணக்கத்தையும் உள்ளடக்கிய சிறந்த சமுதாயத்தை உருவாக்கிடவும், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றிட முன்வரவேண்டும்.

புதிய 2021ஆம் ஆண்டானது ஒவ்வொருவரின் வாழ்விலும், மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். ஒவ்வொருவரும் நல்ஆரோக்கியத்துடன் காணப்பட்டு, ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் யாவும் நிறைவேறக்கூடிய ஆண்டாக திகழ வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளமுடன் வாழ்க - முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details