கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா தற்போது மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களை, முக்கியமாக வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் முகக்கவசங்கள் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து, கைகளை சுத்தமாகப் பேணுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தற்போதைக்கு தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.