கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து கரோனா பாதித்த சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை 31.03.2020ஆம் தேதிவரை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களின் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படக்கூடாது: ஸ்டாலின்
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படதவாறு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் அத்தியவாசியத் தேவைகள் பாதிக்கப்படக்கூடாது
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், " கரோனா வைரஸ் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை மார்ச் 31ஆம் தேதிவரை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், முதலமைச்சர் உடனடியாக ஆலோசனை நடத்தி, மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாதவாறு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இத்தாலியில் ஒரே நாளில் 651 உயிரிழப்பு
Last Updated : Mar 23, 2020, 4:34 PM IST