தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 8, 2022, 7:29 AM IST

ETV Bharat / state

கிழக்கு கடற்கரை சாலையில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.6,078 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில்
கிழக்கு கடற்கரை சாலையில்

சென்னை:கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ரூ.6,078 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடன் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளி தற்போது கோரப்பட்டுள்ளது. மேலும் இத்திட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இத்திட்டம் முடிவுறும் போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள தாம்பரம், பல்லாவரம், மாடம்பாக்கம், செம்பாக்கம், சிட்லபாக்கம், பீர்கங்கரணை, பெருங்களத்தூர், திருநீர்மலை, குன்றத்தூர், காட்டாங்கொளத்தூர் மற்றும் மாங்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 23 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல திருவாரூர், திருச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 2,327.53 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கூட்டு குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது.

திருவாரூர், திருச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1 நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் 1,442 ஊரக குடியிருப்புகளில் 11.26 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 2,327.53 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் அம்ருத் 2.0 நிதியின் கீழ் அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இந்தாண்டில் செயல்படுத்தப்பட்டு நாள்தோறும் 136.34 மில்லியன் லிட்டர் குடிநீர் 92 ஆயிரத்து 420 வீட்டின் இணைப்புகள் மூலம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வன்னியர் இடஒதுக்கீட்டின் நிலை என்ன?- முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details