தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! - ISRO second launching pad in Tamilnadu

சென்னை: தூத்துக்குடியில் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளத்தை அமைக்க 432 ஹெக்டர் புன்செய் நிலங்களை கையகப்படுத்த அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

TN Government releases GO
TN Government releases GO

By

Published : Sep 15, 2020, 10:49 PM IST

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. இது தவிர இந்தியாவில் மற்றொரு ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணிகளும் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், தூத்துக்குடியில் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளத்தை அமைக்க 432 ஹெக்டர் புன்செய் நிலங்களை கையகப்படுத்த அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அடுத்துள்ள பாதவன்குறிச்சி கிராமத்தில் 431.87.74 ஹெக்டேர் புன்செய் நிலங்களை நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் அரசாணை

இது குறித்து தமிழ்நாடு அரசிதழ் மற்றும் இரண்டு வட்டார தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொருளாதாரம், தொழில் வீழ்ச்சி... வெள்ளை அறிக்கை வெளியிடுக! - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details