அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பதிவுசெய்யப்பட்ட கருவிகளுக்குப் பதிலாக பயிற்சிபெற்றவர்களைக் கொண்டு பாடவைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாணையில், "அரசு விழாக்களில் சமீபகாலமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை பதிவுசெய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுகிறது. விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில்கூட பாடுவதில்லை.
மேலும் எந்தவித நாட்டுப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து நிற்கின்றனர். எந்த நோக்கத்திற்காகத் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்துபோகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் - அரசாணை வெளியீடு - chennai district news
தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை நிகழ்ச்சிகளில் ஒலிப்பது குறித்து தமிழ்நாடு அரசு புதிய ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு
எனவே இனிவரும் காலங்களில் பதிவுசெய்யப்பட்ட தேசிய கீதத்திற்குப் பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கெனப் பயிற்சிப் பெற்றவர்களைக் கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு பிடிவாரண்ட்