சென்னை:தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் தற்போது தினசரி கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் இருந்து சென்னை நகரின் பல்வேறு இடங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் வட சென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. சங்கரிடம் திருவொற்றியூரிலிருந்து மற்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
புதிய பேருந்துகள் இயக்கம்
இதனையடுத்து இன்று (ஆக.30) திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர், ராமேஸ்வரத்திற்கு தலா ஒரு பேருந்து, தாம்பரத்திற்கு ஒரு பேருந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை, பிராட்வேக்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் திருவொற்றியூர் ஒடியன்மணி தியேட்டரிலிருந்து கோயம்பேடுக்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம், பொது மேலாளர் செல்வமணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்க பேருந்தை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி சங்கர் ஓட்டினார்.
இதையும் படிங்க: கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு