சென்னை:தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களான அரசு தேயிலை உற்பத்திக் கழகம் (டான்டீ - Tan Tea), அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்டம் கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் சுற்றுச்சூழல், வனத் துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன.
தேயிலை கழகம், ரப்பர் கழகம் ஆகிய நிறுவனங்கள் கடுமையான இழப்பைச் சந்தித்துவருகின்றன. ஆட்கள் பற்றாக்குறை, போதிய உற்பத்தியின்மை, புதிய யுக்திகளை உபயோகப்படுத்தாதது, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றன.