அந்த ஆணையில் தமிழ்நாடு அரசு கூறியுள்ள வழிமுறைகள் வருமாறு :
1. துத்தநாகம் 150 மி.கி. மாத்திரை - ஒரு நாளைக்கு ஒரு முறை என 10 நாள்களுக்கு.
2. வைட்டமின் சி 500 எம்ஜி அல்லது மல்டி வைட்டமின் மாத்திரைகள் ஒரு நாளைக்கு ஒரு முறை என 10 நாள்களுக்கு.
3. நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் மூலிகைத் தூள் (ஒரு நபருக்கு) தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை:
ஒரு கிராம் நிலவேம்பு குடிநீர் அல்லது கபசுரக் குடிநீர் மூலிகைப் பொடியை 240 மில்லி தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைத்து 60 மில்லி வடிகட்டியாகக் குறைத்து மூன்று மணி நேரத்தில் இதைக் குடிக்கவும், தினமும் காலையில் உணவுக்கு முன்பு ஒரு மாதம்.