தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TIDCO: முதலீடுகளை ஈர்க்க தீவிரம்... அரசின் நோக்கம் என்ன? - Acquisition of agricultural lands

கோயம்புத்தூரில் தொழிற்பூங்காவை நிறுவி அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

டிட்கோ தொழிற்பூங்கா: முதலீடுகளை ஈர்க்க தீவிரம்... அரசின் நோக்கம் என்ன
டிட்கோ தொழிற்பூங்கா: முதலீடுகளை ஈர்க்க தீவிரம்... அரசின் நோக்கம் என்ன

By

Published : Dec 16, 2022, 6:32 PM IST

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ்நாடு அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்ததைத் தொடர்ந்து தொழில் மற்றும் கல்வித் துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாகத் தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், மேற்படி தொழிற்பூங்கா அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு (அரசு ஆணை எண்.202, தொழில், மு.ஊ (ம) வர்த்தக (எம்.ஐ.இ.1) துறை, நாள் 10.10.2022) அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா அவர்கள், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார். அக்கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், விவசாய பெருமக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும், தற்போது விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும்.

மேலும் எந்தவித கட்டாயமுமின்றி விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, அவர்களின் நலனிற்காக மட்டுமே செயல்படும். இத்தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும். எனவே டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பட்டியல் இனத்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

ABOUT THE AUTHOR

...view details