தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம் - உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்திட்ட பணிகள் தொடக்கம்

உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

udankudi nuclear power plant expansion
தமிழ்நாடு அரசு

By

Published : Feb 25, 2022, 1:49 PM IST

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ( 4*660) க்கான நிலம் கையகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு ஆணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி அருகே உள்ள கிராமங்களில் இருந்து 605 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தவும், நிலம் கையகப்படுத்தும் போது அதற்கான இழப்பீடு வழங்க ரூ.68.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் ரூ.27 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக்கத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதால் குடியிருப்புகள் பாதிக்கப்படாது எனவும், அந்தப் பகுதிகளில் நினைவுச்சின்னங்கள் எதுவும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலோ அல்லது அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளிலோ விரிவாக்கத்திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தக்கூடாது எனவும் நிலம் கையகப்படுத்தும் பணிக்காகவும் அதனை கண்காணிக்கவும் அலுவலர்கள் உள்பட 78 ஊழியர்களை நியமித்து மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு இரண்டு மின் உற்பத்தி திட்டங்களை மறு ஆய்வு மேற்கொண்டதன்படி செயலாக்கத்திற்கு கொண்டு வருகிறது என்றும் 2007 - 2008ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு செயலாக்கத்திற்கு கொண்டுவராத அனல்மின் திட்டங்களை மீண்டும் செயலாக்கத்திற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தி துமக்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details