சென்னை:ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு, அதற்கு தமிழக அரசு தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 13ம் தேதி தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 19) இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், ''தமிழ்நாடு அரசு இயற்றி உள்ள இணைய வழி சூதாட்ட தடைச் சட்டம், இணைய வழி விளையாட்டு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 2022 குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு பற்றி உள்ளோட்டமாக கருத்துகளைக் கூற முடியாது. ஆன்லைன் தடைச்சட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மேலோட்டமாக தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்கிறோம்.
மத்திய அரசு ஆன்லைன் தடைச் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு சட்டம் இயற்றவில்லை என நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது. இது நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டது எனக் கூறினாலும், ஏற்கனவே அதிமுக அரசு இந்த சட்டத்தை இயற்றியது. அவசர சட்டமாக இருப்பதால், அதனை ரத்துச் செய்வதாகவும், தமிழ்நாடு அரசு புதிய சட்டம் கொண்டு வருவதில் எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை: சங்கரன்கோவிலில் 2ம் நாள் போராட்டம்!
ஆனால், ஒன்றிய அரசு அதன் மீது எந்த விதமான மனுவையும் தாக்கல் செய்யாமல், ஒன்றிய அரசு சட்டம் இயற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார். ஒன்றிய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தனியாக எந்த சட்டமும் எனக்குத் தெரியவில்லை.