ஆன்லைன் ரம்மி விளையாடிய பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதால், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசிற்கு கோரிக்கைவைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "இளைஞர்களின் பணத்தையும், நேரத்தையும் வீணடித்து வாழ்க்கையை சீர்குலையச் செய்வதோடு, உயிரையும் பறிக்கும், பணம் வைத்து விளையாடக்கூடிய அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய அதிமுக அரசு அரசு முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோரையும் அதில் ஈடுபடுவோர்களையும் குற்றவாளிகளாக கருதி அவர்களை கைது செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு துரிதமாக எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, விற்கத் தடை: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி