தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக்கவசம், சானிடைசருக்கு விலை நிர்ணயம்! - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

முகக்கவசம், கிருமிநாசினி, பிபிஇ கிட் உள்ளிட்ட 15 கரோனா தொற்று தடுப்பு மருத்துவ பொருள்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

sanitizers
sanitizers

By

Published : Jun 8, 2021, 9:11 PM IST

கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவை அதிகவிலைக்கு விற்கபடுவதால் பலராலும் வாங்கமுடியாத சூழல் நிலவிவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு 15 கரோனா தொற்று தடுப்பு மருத்துவ பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அவற்றின் விலை விவரம் பின்வருமாறு:

விலை விவரம்

  • மூன்று அடுக்கு சர்ஜிகல் முகக்கவசம் - ரூ.4
  • மூன்று அடுக்கு சர்ஜிகல் முகக்கவசம் - ரூ.4.50
  • இரண்டு அடுக்கு சர்ஜிகல் முகக்கவசம்- ரூ.3
  • என் 95 முகக்கவசம் - ரூ.22
  • கிருமிநாசினி 200 மி.லி - ரூ.110
  • பிபிஇ கிட் - ரூ.273
  • ஃப்ளோ மீட்டர் - ரூ.1,520
  • பல்ஸ் ஆக்சிமீட்டர் - ரூ.1,500
  • ஃபேஸ் ஷீல்டு - ரூ.21.

இதையும் படிங்க:இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details