சென்னை:அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு செயலாளர் டாக்டர் எஸ்.சையது தாஹிர் ஹூசைன் இன்று (அக்.11) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, " எங்களது 17 கோரிக்கைகளில் ஒரே ஒரு கோரிக்கை தான் நிதி சார்ந்த கோரிக்கை. போருக்கு சென்று உயிரிழக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். ஆனால் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை.
கரோனா தொற்று நாள் ஒன்றுக்கு 34 ஆயிரமாக இருந்த போது அரசு மருத்துவர்கள் தான் சிகிச்சை அளித்தனர். கரோனா தொற்றால் ஏழு அரசு மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினர் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கார்ப்பஸ் ஃபண்ட் திட்டம்
அரசு மருத்துவர்கள் திடீரென்று உயிரிழக்கும் போது, அவர்கள் குடும்பத்தினருக்கு உதவ, மருத்துவர்களின் பங்களிப்பில் ‘கார்ப்பஸ் ஃபண்ட்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்கிறோம். புதிய அரசு பதவி ஏற்றும் மருத்துவர்களின் இது போன்ற சிறிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இழப்பீடு குறித்து கேட்டால் ஒன்றிய அரசு நிதி உதவி வழங்கி இருக்கிறது என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு அரசு தானே இழப்பீடு வழங்க வேண்டும்.
ஊதிய முரண்பாடு